உக்ரைன் போர் பதற்றம்: ரத்தானது அமெரிக்க - ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க தயராகி வருவதால் இனி அந்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் பயன் இல்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனான சந்திப்பை ரஷ்யா ரத்து செய்துவிட்டதாக கூறி, பேச்சுவார்த்தையை ரஷ்யா நிராகரித்துவிட்டது. இதற்கிடையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான கதவை மூடவில்லை என்றும், இன்னும் தாமதமாகவில்லை என்றும் அறிவித்தார்.
போரை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை அவர் அழைத்தார். அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனும், வெளிப்படையான போரை தவிர்க்குமாறு ரஷ்ய இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.