விரைவில் வருகிறது கஞ்சா பீட்சா..எந்த நாட்டில் தெரியுமா?
தாய்லாந்து நாட்டில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தாய்லாந்து நாட்டில் உள்ள 'கிரேசி ஹாப்பி பீட்சா' இந்த தகவலினை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் நிறுவனத்தின் மேலாளர் பானுசக் குன்சாட்பூன் கூறியதாவது,
கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது.
ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும். அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னின் புகழ்பெற்ற பீட்சா தயாரிப்பாளர்கள் சக்திவாய்ந்த கஞ்சாவை விருப்பமான சுவையூட்டியாக வழங்குகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.