ஸ்காட்லாந்தின் எல்லைகளில் கஞ்சா உற்பத்தி நிறுவனம்
ஸ்காட்லாந்தின் எல்லைகளில் ஒரு கஞ்சா உற்பத்தி நிறுவனம் நிறுவத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்காட்லாந்தில் (Breathe Life Sciences) ப்ரீத் லைஃப் சயின்சஸ் (BLS) என்ற பல்தேசிய மருத்துவப் பொருள் நிறுவனமே இதனை நுறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் மருந்து உற்பத்தி
இந்த ஒரு கஞ்சா உற்பத்தி நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதியில் திறக்கப்படும்போது 36 வேலைகளையும், மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 100 வேலைகளையும் உருவாக்கும் என நிறுவனம் உறுதியளிக்கிறது.
இங்கிலாந்தில் மருத்துவ கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்ட பின்னர் வளர்ந்து வரும் சந்தை மற்றும் ஐரோப்பாவில் இங்கிலாந்து வேகமாக வளர்ந்து வரும் பகுதி என்று நிறுவனத்தின் பிரதானி சாம் வாட்சன் இந்த திட்டத்திற்கு காரணம் கூறுகிறார்.
இந்த முயற்சியானது இங்கிலாந்தில் தற்போது பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகளுக்கான உள்ளூர் மருந்து உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 2018 இல் சட்டப்பூர்வமாக்கப்பட்டதிலிருந்து, இந்தச் சந்தை ஆண்டுக்கு சுமார் £250 மில்லியன் மதிப்பைக் கொண்டுள்ளது, அதேவேளை செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தற்போதைய 80 ஆயிரத்திலிருந்து இலிருந்து தசாப்தத்தின் இறுதிக்குள் 190ஆயிரமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.