டொரோண்டோவில் வாகனத்தில் மோதுண்ட பெண் பலி
கனடா, டொரோண்டோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஸ்கார்பரோ பகுதியில் வாகனத்தில் மோதி விட்டு தப்பிய சம்பவத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார் கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்த காரின் சாரதி இதுவரை பிடிபடவில்லை என்று டொரோண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் சோனாடா (Hyundai Sonata) மாடல் கார், விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள Sheppard Avenue East பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறைியனர் அந்த காரின் புகைப்படங்களை வெளியிட்டனர்.
விபத்து இடம்பெற்ற தினத்தில், இரவு 9 மணிக்கு பிறகு. Sheppard Avenue East மற்றும் Bridlewood Boulevard சந்திப்பில், அந்த பெண் சாலையை கடக்கும்போது கிழக்கே சென்றுக் கொண்டிருந்த சோனாடா கார் அவர் மீது மோதி, உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காயங்களினால் சம்பவ இடத்திலேயே அவர் மரணித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவரது அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.