எதிர்பாராதவிதமாக எண்ணெய் டேங்கர் கப்பல்மீது மோதிய சரக்குக் கப்பல் !
நெதர்லாந்து அருகே கடலில் வீசிய புயலின் போது சரக்கு கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதிய சம்பவத்தில் 18பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜெர்மனியில் இருந்து Amsterdam நோக்கி பிரம்மாண்டமான சரக்கு கப்பல் வடகடல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தப்போது அங்கு 120கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கோரி புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதனால் கடலில் இருந்து நாலாபுறமும் பிரமாண்டமான அலைகள் ஆர்ப்பரித்து எழுந்த படி காணப்பட்டன.
இத்தகைய சூழலில் அந்த சரக்கு கப்பலின் மீது எண்ணெய் மற்றும் வேதிப் பொருட்கள் ஏற்றி வந்த டேங்கர் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்று ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் சிக்கி இருந்த 18பேரை பத்திரமாக மீட்டனர்.