மரதன் ஓட்டப் போட்டியில் அசத்திய கனடிய பிரதமர்
கனடிய பிரதமர் மார்க் கார்னி அண்மையில் மரதன் ஒட்டப் போட்டியொன்றில் பங்கேற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
26 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட மரதன் ஒட்டப் போட்டியில் பிரதமர் 52ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
வடக்கு டொரொண்டோவின் ஹாலிபோர்டன் வனப் பகுதியில் இந்த மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.
மரதன் ஓட்டப் போட்டி
கனடவின் மிக நீண்ட தூரங்களைக் கொண்ட மரதன் ஓட்டப் போட்டிகளில் ஒன்றாக இந்தப் போட்டி கருதப்படுகின்றது.
இந்தப் போட்டியில் பிரதமர் கர்னி 58ம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
26 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த மரதன் ஓட்டத்தை பிரதமர் கர்னி மூன்று மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் ஓடிக் கடந்துள்ளார்.
கடந்த 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒட்டாவா மரதன் மற்றும் லண்டன் மரதன் ஓட்டப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் நடைபெற்று வரும் மரதன் ஓட்டப் போட்டிகளில் மிகவும் கடினமான போட்டிகளில் ஒன்றாக பிரதமர் பங்கேற்ற போட்டி கருதப்படுகின்றது.