கனடிய பிரதமர் ஆசிய நாடுகளுக்கு விஜயம்
கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த மாத இறுதியில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு ஒன்பது நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் இரண்டு முக்கிய பன்னாட்டு உச்சி மாநாடுகளில் கலந்து கொள்கிறார்.
முதலில், கார்னி கோலாலம்பூரில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகள் சங்க (ASEAN) உச்சி மாநாட்டில் பங்கேற்பார்.
வர்த்தக உறவுகள்
அங்கு மலேசிய பிரதமருடன் சந்தித்து வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
அதன்பின், அவர் சிங்கப்பூர் பிரதமர் மற்றும் பிராந்திய வணிகத் தலைவர்களுடன் சந்தித்து, வர்த்தக தடைகள் நீக்கம் மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து விவாதிக்கவுள்ளார்.
கார்னியின் இறுதியாக தென்கொரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
அங்கு க்யோங்ஜூ நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்.
மேலும், தனது தென் கொரியா பயணத்தின் போது ஹான்வா ஓசன் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தையும் அவர் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் கனடாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்கான இறுதி போட்டியாளர்களில் ஒன்றாகும்.
மார்க் கார்னி அக்டோபர் 24 முதல் நவம்பர் 1 வரை ஆசியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.