சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து கார்னியின் அறிவிப்பு
சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) மேற்கொள்ள கனடாவுக்கு எந்த நோக்கமும் இல்லை என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார்.
சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடிய பொருட்களுக்கு 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டிய ஒரு நாளுக்குப் பின்னர், கார்னி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
ஒட்டாவாவில் நடந்த லிபரல் கட்சி கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கார்னி, இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சீனாவுடனோ அல்லது சந்தை பொருளாதாரம் இல்லாத வேறு எந்த நாட்டுடனோ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் உருவான சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டுள்ளோம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் அண்மைய மிரட்டலுக்குப் பிறகு அவருடன் பேசியுள்ளாரா என்ற கேள்விக்கு, கார்னி நேரடியாக பதிலளிக்கவில்லை.
கனடா–அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையுடன் ஒத்திருக்கின்றன.
“சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி எந்த முயற்சியும் இல்லை. சில முக்கிய சுங்க வரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே நடந்துள்ளது,” என்று அவர் சமூக வலைதளமான X-இல் தெரிவித்திருந்தார்.
மேலும், கனடா–அமெரிக்க–மெக்சிகோ ஒப்பந்தம் (CUSMA) கீழ் உள்ள ஒரு சிறப்பு விதியை கார்னி குறிப்பிட்டார்.
அந்த விதி, சீனா போன்ற “சந்தை பொருளாதாரம் இல்லாத நாடுகளுடன்” உறுப்புநாடுகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.