அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் தொடர்பில் கனடா பிரதமர் விமர்சனம்
அமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று, சமீபத்தில் தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடயம் உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள்முதல், ட்ரம்ப் மற்ற நாடுகளை கதிகலங்கவைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று வெளியே கசிய, ட்ரம்ப் கேலிக்குள்ளாகியிருக்கிறார்.
கனடாவை தொடர்ந்து ட்ரம்ப் வம்புக்கிழுத்துவந்த நிலையில், கசிந்த ராணுவ ரகசியங்களால் தர்மசங்கடமான நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்பட, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கனடா பிரதமரான மார்க் கார்னியும், நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
இது மிகவும் சீரியஸான விடயம் என்று கூறியுள்ள கார்னி, இதுபோன்ற விடயங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் கனடாவுக்கு வலுவான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான உறவு உள்ளது என்று கூறியுள்ள கார்னி, ஆனால், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.