அமெரிக்க கனடிய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் கனடிய பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றயை தினம் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கனடா பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இருவரும் வர்த்தகம் மற்றும் "புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவு" குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவில் "நீண்டகால அமைதி" குறித்தும் உரையாடியதாகவும் விரைவில் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசி வழியாக இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த அழைப்பை கார்னியே தொடங்கினார் என்றும், உரையாடல் "நீண்ட மற்றும் முக்கியமானதாக" இருந்ததாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உரையாடல், கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து வரும் வர்த்தகப் போரின் பின்னணியில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.