கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவன பணியாளர்களின் திடீர் தீர்மானம்
கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் பணியாளர்களின் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்கப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
எனினும் இறுதி நேரத்தில் போராட்டத்தை இடைநிறுத்துவதாக பணியாளாகள் அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்க கோரிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவத்துள்ளனர்.
கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் ஒன்பதாயிரம் பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருந்தனர்.
எதிர்வரும் புதன்கிழமை வரையில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.