இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை -ஜிகாத் பயங்கரவாத அமைப்பு

Israel Palestine
By Kamal Aug 09, 2022 02:31 AM GMT
Report
Courtesy: dailythanthi

இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடாத்தப் போவதாகவும் தமது உறுப்பினர்கள் கைதானதை எதிர்த்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இஸ்லாமிக் ஜிகாத் என்ற பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. காசா முனையில் ஹமாஸ் மட்டுமின்றி மேலும் சில ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காசா முனையில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பு ஹமாஸ் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஈரானின் உதவியுடன் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகத் அமைப்பின் மூத்த தளபதியை கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குகரையின் ஜெனின் பகுதியில் இஸ்ரேல் கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்குகரை பகுதியில் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதிகள்ல், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக மோதல் எகிப்து தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. அமைதி ஒப்பந்தம் ஞாயிறுக்கிழமை இரவு 11.30 மணி முதல் அமலுக்கு வரத்தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை -ஜிகாத் பயங்கரவாத அமைப்பு | Ceasefire Between Israel Gaza Militants

அமைதி ஒப்பந்தத்தின்படி, தங்கள் அமைப்பை சேர்ந்த மூத்த தளபதிகளான ஹலில் அவாவ்டாவை அமைதி ஒப்பந்தம் நடந்த மறுநாளுக்கு உள்ளும், மற்றொரு தளபதியான ஷேக் பாஷிம் அல் ஷாதியை 2 வாரத்திற்கு உள்ளும் இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் என பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் சிறையில் உள்ள தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது. அவ்வாறு விடுதலை செய்யவில்லை என்றால் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடருவோம் என்று பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US