விளம்பரத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கிய பிரபல பால் உற்பத்தி நிறுவனம்!
தென்கொரியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக 'சியோல் மில்க்’ நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பர வீடியோவில் பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. விளம்பர வீடியோவில், ஒரு நபர் காட்டுப்பகுதியில் சில பெண்கள் வெள்ளை நிற உடையணிந்து ஓடையில் ஓடும் நீரை குடிப்பது போன்றும், யோகா செய்வது போன்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அப்போது, அவர் கிழே கிடக்கும் மரத்துண்டில் தனது காலை வைத்ததால் அது உடைகிறது. அந்த சத்தத்தை கேட்ட அப்பெண்கள் திடீரென பசு மாடுகளாக மாறுகின்றனர்.
இதனைதொடர்ந்து தூய்மையான நீர், ஆரோக்கியமான உணவு, 100 சதவிகிதம் சியோல் பால். இயற்கையான சூழ்நிலையில் இருந்து இயற்கையான பால்’ என அந்த விளம்பரம் முடிவடைகிறது.
An ad by Seoul Milk (서울우유) depicting a voyeur filming women — who then turn into cows — has been pulled by the company following outcry.
— Women's Voices (@WomenReadWomen) December 14, 2021
South Korea is the global epicenter of spy cam pornography (몰카).
Some women victimized have committed suicide.pic.twitter.com/2xdyguFoci
பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து காட்சிப்பொருளாக்கி பால் விளம்பரம் செய்ததாக சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மீது உலக அளவில் கண்டனம் எழுந்தது. அத்துடன் சியோல் பால் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என தென் கொரியாவில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
இதனால், சியோல் பால் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை பெருமளவு சரிந்தது.
உலகலாவிய சர்ச்சையை தொடர்ந்து பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து விளம்பரம் எடுத்ததற்க்கு சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது.