தனது நெருங்கிய ஆண் நண்பரை திருமணம் செய்துகொண்ட பிரபல நிறுவனத்தின் CEO!
பிரபல OpenAI நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த இருவரும் ஹவாயில் நேற்றைய தினம் (11-01-2024) மிகவும் எளிமையான முறையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவர் முல்ஹெரின் மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
ஆலிவர் முன்ஹெரின் Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது ஐஓடி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
தற்போது, சாம் ஆல்ட்மேனுடன் திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆலிவர் முல்ஹெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்'' என தெரிவித்துள்ளார்.