1971ல் பிறந்தவர்களுக்கு இந்த நாட்டில் இலவச ஷொப்பிங் அனுமதி
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக 1971ல் பிறந்த குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக ஷொப்பிங் செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலவச ஷொப்பிங் வாய்ப்பானது துபாய் மாகாணத்தில் செயல்படும் Union Coop ஹைப்பர் மார்க்கெட்டில் அளிக்கப்படுகிறது.
1971ல் பிறந்தவர்கள் குறித்த ஹைப்பர் மார்க்கெட்டிற்கு சென்று பதிவு செய்து கொள்வதுடன், ஹைப்பர் மார்க்கெட்டில் அளிக்கப்படும் Afdhal அட்டையை பயன்படுத்தி இலவசமாக ஷொப்பிங் செய்யலாம்.
நவம்பர் 10ம் திகதி முதல் 100 நாட்கள் இந்த இலவச ஷொப்பிங் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த Afdhal அட்டையின் மதிப்பு எவ்வளவு என்பது தொடர்பிலும், நிபந்தனைகள் தொடர்பிலும் Union Coop ஹைப்பர் மார்க்கெட் நிர்வாகம் இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
இலவச ஷொப்பிங் மட்டுமின்றி, தெரிவு செய்யப்படும் 50 வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போன்கள், மேலும் 50 வாடிக்கையாளர்களுக்கு தங்க கட்டிகள், இன்னொரு 50 வாடிக்கையாளர்களுக்கு mountain bikeகள் மற்றும் 50 Tamayaz அட்டைதாரர்களுக்கு 50,000 புள்ளிகள் இலவசமாகவும் வழங்க உள்ளனர்.
மேலும், ஆயிரக்கணக்கான பொருட்களின் விலையை, மொத்தமாக சுமார் 50 மில்லியன் திர்ஹாம் அளவுக்கு குறைத்துள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் அதிகமாக பயன்பெற முடியும் எனவும் அறிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, உணவுப்பொருட்கள், மாமிசம், பழங்களுக்கும் 50 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கின்றனர்.
எதிர்வரும் 10ம் திகதி முதல் 100 நாட்கள் இந்த இலவச மற்றும் தள்ளுபடி வாய்ப்புகள் அமுலில் இருக்கும் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.