பிரான்சின் புகழ்பெற்ற நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு இந்திய பெண் நியமனம்
பிரான்சின் உலக புகழ்பெற்ற ஆயத்த ஆடை விற்பனை நிறுவனமான ஷனெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இந்தியரான லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மராட்டிய மாநிலம் கோலாபூரில் பிறந்தவர் லீனா நாயர். ஜம்ஷெத்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்வி நிறுவனத்தில் மனிதவள படிப்பில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அதன்பின்னர் கடந்த 1992ம் ஆண்டில் யுனிலீவர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அவர், அந்நிறுவனத்தின் முதல் பெண் மற்றும் இளைய தலைமை மனிதவள அதிகாரியாக பொறுப்பேற்றார்.
கடந்த 30 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த லீனா நாயர் வரும் ஜனவரி மாதம் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பிரான்சின் பேஷன் ஆடை மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் ஷனெல் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக லீனா நாயர் கூறுகையில், 'உலகின் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் நிறுவனமான ஷனெல் உலகளாவிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.