தைவான் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட களேபரம்... வெளியான பரபரப்பு வீடியோ!
தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் நாடாளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது.
அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர்.
தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
தைவானில் சில நாட்களில் ஜனாதிபதியாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல்,
Taiwan's opposition alliance, which holds a majority in the Legislative Yuan, has submitted a bill for reforming the legislature.
— ShanghaiPanda (@thinking_panda) May 17, 2024
The ruling DPP, in an effort to prevent the bill from passing - sent a lawmaker to snatch it away.
Really, snatched it.?pic.twitter.com/17PYIjwO02
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட KMT கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.