லொத்தர் சீட்டிலுப்பில் 2 தடவை பரிசு வென்றவர்:மனைவிக்கு கொடுக்கும் பரிசு?
ஹமில்டனை சேர்ந்த சமையற்கலை நிபுணர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் இரண்டு தடவைகள் பெருந்தொகை பணப்பரிசு வென்றுள்ளார்.
ஒன்றாரியோ லொட்டரி மற்றும் கேமிங் ஆணைக்குழு இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
55 வயதான ஜோன் மெக்கோ என்ற சமையற் கலை நிபுணர் INSTANT TOP UP லொத்தர் சீட்டிலுப்பில் 91205.10 டொலர்கள் பரிசு வென்றுள்ளார்.
இந்த லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றமை பெரு மகிழ்ச்சிஅளிப்பதாக மெக்கோ தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2019ம் ஆண்டிலும் மொக்கோ 75000 டொலர்கள் பரிசு வென்றுள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்புக்களில் கலந்து கொள்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் கிடைக்கப் பெற்ற பணத்தைக் கொண்டு மனைவியுடன் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா மேற்கொள்ள உள்ளதாகவும் நண்பர்களுடன் நயகரா வீழ்ச்சிக்கு செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமில்டனின் வில்சன் வீதியில் அமைந்துள்ள லொத்தர் சீட்டு விற்பனை நிலையத்தில் தாம் இந்த லொத்தர் சீட்டை கொள்வனவு செய்ததாக தெரிவித்துள்ளார்.