கனடாவில் ரயிலில் மோதுண்ட 4 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்
கனடாவின் ஆண்ட்ரியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகுவா பகுதியில் ரயிலில் மோதுண்டு நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கோ டிரெயின் எனப்படும் ரயிலில் மோதுண்டு சிறுமி உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டுன்டாஸ் வீதி மற்றும் சவ்ட்ரா வீதி ஆகியவற்றுக்கு இடையிலான பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பீல் போலீசார் தெரிவிக்கின்றனர்.
ரயில் பாதையில் சிறுமியை கண்ட ரயில் சாரதி பல தடவைகள் ஹோர்ன் போர் ஒலி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி எவ்வாறு ரயில் பாதைக்கு வந்தார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சிறுமி ரயிலில் மோதுண்டபோது ரயிலில் சுமார் 300 பயணிகள் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.