சிறுவர்கள் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் ; மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தளங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம், தனது தளங்களின் பாதுகாப்பு குறித்துப் பொய்களைக் கூறி நுகர்வோரை ஏமாற்றியதாக நியூ மெக்சிகோ நடுவர் மன்றம் (Jury) தீர்ப்பளித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்ச தண்டனையாக மொத்தம் 375 மில்லியன் டொலர் அபராதத்தை மெட்டா செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திய வெளியிட்டுள்ளன.

தமது தயாரிப்புகள் சிறுவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மெட்டா நிர்வாகிகள் அறிந்திருந்தனர்.
சொந்த ஊழியர்களின் எச்சரிக்கைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை," என நியூ மெக்சிகோ சட்ட மா அதிபர் ரவுல் டோரஸ் (Raúl Torrez) சாடியுள்ளார்.
எந்தவொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விசாரணையில், சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மெட்டாவின் வடிவமைப்பு வசதியாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.