தாமரை கோபுரத்தில் விழுந்த சிறுமி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்
தாமரை கோபுரத்தில் விழுந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் 16 வயதான சிறுமி ஒருவர் தாமரை கோபுரத்தின் 29 ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.
உண்மையில் குறித்த சிறுமி 29ம் மாடியிலிருந்து இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 11-ல் கற்கும் கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி தனியாக தாமரை கோபுரத்திற்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் சர்வதேச பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவர்கள் சொகுசு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து உயிரிழந்திருந்தனர்.
மாணவி ஒருவரும் மாணவரும் இவ்வாறு கொம்பனி தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தனர்.
இந்த இருவரும் நேற்றைய தினம் உயிரிழந்த மாணவியின் நெருங்கிய நண்பர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு மாணவர்களின் மரணத்தின் பின்னர் குறித்த மாணவி மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தார் என பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.