கனடா பாடசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள்: குற்றம்சாட்டும் பழங்குடியினர்!

police investigation canada school justin trudeau
By Shankar Jun 01, 2021 12:42 AM GMT
Report

கனடாவில் கம்லூப்ஸ் பகுதியில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகம் ஒன்றில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அண்மையில் நடந்தது.

அந்த குழந்தைகள் இனப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பழங்குடியின தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் கடந்த 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் கால்பதித்தனர்.

ஆரம்பத்தில் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த அந்த நாடு கடந்த 1763 ஆம்ஆண்டில் பிரிட்டன் கட்டுப்பாட்டில் வந்தது.1982 இல் கனடா தனிநாடாக உதயமானது. தற்போது வரை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தே கனடாவின் ராணியாகவும் இருக்கிறார்.  

ஐரோப்பியர்கள் கனடாவில் குடியேறியபோது அங்கு இனுவிட், மெயிரி உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர்.

ஐரோப்பியர்களின் குடியேற்றத்துக்கு கனடாவின் பூர்வகுடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப் படுகொலை செய்தனர்.

இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் பூர்வகுடி குழந்தைகளுக்காக விடுதியுடன்கூடிய பாடசாலைகள் நடத்தப்பட்டன.

கடந்த 1863 முதல் 1998 ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் 1.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு உறைவிட பாடசாலைகளில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது ஏராளமான குழந்தைகள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கனடாவின் பழங்குடியின பாடசாலை வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கம்லூப்ஸ் நகரில் கடந்த 1890 முதல் 1969 வரை பழங்குடியின குழந்தைகளுக்காக உறைவிடப் பாடசாலை செயல்பட்டு வந்தது. கடந்த 1969 ஆம்ஆண்டில் கனடா அரசு, பாடசாலை நிர்வாகத்தை தனது பொறுப்பில் எடுத்தது.

கடந்த 1978 இல் பாடசாலை மூடப்பட்டது. கனடா பழங்குடியின அமைப்பு சார்பில் கம்லூப்ஸ் பாடசாலையில் அண்மையில் ரேடார் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பூமிக்கடியில் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரேடாரில் இதுவரை 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உள்ளூர் பழங்குடியின தலைவர் லிசா கூறும்போது, “ரேடாரில் மட்டுமே எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். 3 வயது குழந்தையின் எலும்பு கூடும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பாடசாலை வளாகத்தில் வேறு எங்கேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

கனடா முழுவதும் சுமார் 130 இக்கும் மேற்பட்ட பழங்குடியின உறைவிட பாடசாலைகள் செயல்பட்டு வந்தன. இந்த பாடசாலைகளின் செயல்பாடு குறித்து விமர்சனம் எழுந்ததால் கடந்த 2008 இல் கனடா அரசுபழங்குடி உறைவிட பாடசாலை நடைமுறையை முழுமையாக ஒழித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2017 இல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “கனடா பழங்குடியின உறைவிட பாடசாலை நடைமுறைக்காக கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கம்லூப்ஸ் பாடசாலையில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டிருப்பது இதயத்தை உடைக்கிறது. நமது நாட்டின் இருண்ட காலத்தை வேதனையுடன் நினைவுபடுத்துகிறது.

இந்த செய்தியால் வேதனையில் ஆழ்ந்திருக்கும் அனைவரின் சோகத்தில் நானும் பங்கு எடுக்கிறேன். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.   

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பழங்குடியின மக்களின் பிராந்திய தலைவர் டெரி கூறும்போது, “பழங்குடி உறைவிட பாடசாலைகளில் படித்த குழந்தைகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.

எங்களது தாய் மொழியை அழித்து பிரெஞ்சு, ஆங்கிலத்தை திணித்தனர். நாட்டில் முதல்முறையாக மிக அதிக எண்ணிக்கையில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை தோண்டியெடுத்து மரபணு பரிசோதனை நடத்த வேண்டும்.

இதை இனப்படுகொலை என்றே குற்றம் சாட்டுகிறோம். இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. எனினும் கனடா அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.  

பழங்குடி அமைப்பின் தேசிய தலைவர் ரோஸ்னே கேஸ்மிர் கூறும்போது, “கனடா உறைவிட பாடசாலைகளில் பயின்ற குழந்தைகளுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை. பாடசாலை நிர்வாகங்களின் கொடுமை, தொற்று நோய்களால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

ஏராளமான குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அவ்வாறு குழந்தைகளை கொலை செய்து புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 இடங்களை கண்டறிந்துள்ளோம்.

இதில் கம்லூப்ஸ் பாடசாலையில் மட்டும் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளோம். நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் சமுதாய குழந்தைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். அந்த இடங்களை தேடி கண்டுபிடித்து ஆய்வு செய்வோம்” என்றார்.  

இதுவரை 4,100 குழந்தைகள் மாயம்

கனடாவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் கமிஷன் (டிஆர்சி) என்ற அமைப்பு, கத்தோலிக்க தேவாலய நிர்வாகங்கள் நடத்திய பழங்குடி உறைவிட பாடசாலைகள் குறித்து சுமார் 6 ஆண்டுகள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

கனடாவில் சுமார் 150 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பழங்குடியின உறைவிட பாடசாலைகளில் எத்தனை மாணவ, மாணவியர் உயிரிழந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

எங்களது ஆய்வின்படி சுமார் 4,100 பேர் மாயமாகி உள்ளதாக கணக்கிட்டுள்ளோம். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பழங்குடியின தலைவர்கள் கூறும்போது, “உறைவிட பாடசாலைகளில் கல்வி பயின்ற சுமார் 6,000 பேர் உயிரிழந்திருக்கலாம். அவர்களின் இறப்பை அந்தந்த பாடசாலை நிர்வாகங்கள் மறைத்துள்ளன. அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

கம்லூப்ஸ் பாடசாலையில் 52 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாங்கள் 215 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US