இலங்கையில் மிளகாய் சுவை கொண்ட ஐஸ்கிரீம்: புதிய கண்டுபிடிப்புக்கு பாராட்டு
வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார்.
ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டலில் சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் மிளகாய் ஐஸ் கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் வழங்கப்பட்ட விவசாயத் துறை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் லசந்த ருவன் லங்காதிலக்க என்ற விவசாயி மிளகாய் ஐஸ் கீரிமை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இனிப்பு மற்றும் கார சுவை
புதிதாக தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஐஸ்கிரீம் இனிப்பு மற்றும் கார சுவையை உள்ளடக்கிய புதிய சுவையைத் தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக இரண்டு வகையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்கிரீமை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |