சீனாவில் மீண்டும் பரவும் புதிய வகை வைரஸ்! ஒரே நாளில் இத்தனை பேரா?
கொரோனா வைரஸ் தொற்று முதல் முதலில் உருவான சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சீனாவில் புதிதாக 3,400 பேர் புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு வெகு வேகமாக சரிந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த தொற்று தற்போது உயர தொடங்கி இருப்பது அந்த நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜிலின் மாகாணத்தில் 500-க்கும் அதிகமாமோனர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து, அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனா பரவல் அதிகமுள்ள ஷாங்காய் மாகாணத்தில் உள்ள யூசெங், ஜில்லின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் ஆகிய நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.