சீனாவின் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ; 7 பேர் பலி ; பலர் படுகாயம்
சீனாவின் தன்னாட்சி மாகாணமான குவாங்சி மாகாணத்தின் லிங்சியாங் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை 1:40 மணியளவில் திடீரென வெடிவிபத்து நேரிட்டுள்ளது.
தகவலறிந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் காயமடைந்த 17 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்த எரிவாயு பைப் லைன் வெடிப்பால் நிகழ்ந்தது என கருதப்பட்ட நிலையில் பைப் லைன் ஏதும் வெடிக்கவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.