அதிகார அரசியலை எதிர்க்க முன்வருமாறு இந்தியாவுக்குச் சீனா அழைப்பு

Sahana
Report this article
உலகின் தெற்கு பகுதியில் முக்கியமான நாடுகளாக உள்ள இந்தியாவும், சீனாவும், மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் கூட்டாக எதிர்க்க முன் வர வேண்டும் எனச் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்த பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நேர்மறையான வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளும் பண்டைய நாகரிகங்களாக உள்ள நாடுகள், எல்லை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவதற்கு போதுமான ஞானமும் திறனும் இந்தியா, சீனாவிடம் உள்ளது.
எல்லைப் பிரச்சினை அல்லது குறிப்பிட்ட கருத்து வேறுபாடுகளால் இரு தரப்பு உறவுகள் வரையறுக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது எனவும் சீனா தெரிவித்துள்ளது.
அவை இரு தரப்பு உறவுகளைப் பாதிப்பதாகவும், மிகப்பெரிய அண்டை நாடுகளாக, இரு நாடுகளும் வெற்றியின் பங்காளிகளாக இருக்க வேண்டும் எனவும் சீனா எதிர்பார்ப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் தெற்கு பகுதியில் முக்கியமான நாடுகளாக உள்ள இந்தியாவும், சீனாவும், மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் கூட்டாக எதிர்க்க முன் வர வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் எனச் சீனா குறிப்பிட்டுள்ளது.