கனடாவை கடுமையாக சாடும் சீனா
கனடிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது என சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக மனித உரிமை விவகாரங்களில் கனடா இரு முகங்களை காண்பிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது.
கனடாவில் பழங்குடியின சமூகத்தினர் உரிமைகளை கனடா முடக்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் மனித உரிமைகளை காரணம் காட்டி சீன அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு தடை விதிக்கப்பட முடியும் என சீனா கேள்வி எழுப்பியுள்ளது.
சீனாவை சேர்ந்த எட்டு அதிகாரிகளுக்கு கனடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
சீனாவில் வாழ்ந்து வரும் உய்குர் சமூகத்தினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளை கண்டித்து கனடிய அரசாங்கம் இவ்வாறு அதிகாரிகளுக்கு தடை விதித்துள்ளது.
எவ்வாறு எனினும் சீன உள்விவகாரங்களில், கனடா தலையீடு செய்வதாகவும் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல என சீனா குற்றம் சுமத்தியுள்ளது.