தாய்வானை தொடர்ந்து பயமுறுத்தும் சீனா!
தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள வலயம் மற்றும் பஷி கால்வாயில் தெற்காக சீன போர் விமானங்கள் பறப்பது அதிகரிக்கப்பட்டிருப்பது தீவை சுற்றிய பகுதியில் அதன் விரிவாக்கங்களின் ஓர் அங்கமாக இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 555 படை செயற்பாடுகளை சீன இராணுவம் மேற்கொண்டிருப்பதோடு இதில் 398 போர் விமான செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றன.

இதன்படி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 187 தடவைகளாகவே அது இருந்துள்ளது என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்வானை தனது ஆட்புலத்தின் ஓர் பகுதியாகக் குறிப்பிடும் சீனா, அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சாத்தியத்தையும் நிராகரிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        