குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா? திடீரென அதிகரிக்கும் பாதிப்பு
சீனாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 207 பேரின் 51 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் 156 பேர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,01,890 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது.
மேலும், சீனாவின் தலைநகரான பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போது அங்கு திடீரென கொரோனா தொற்று அதிகரித்டு வரும் நிலையில், போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.