பிரித்தானியாவின் உளவு நடவடிக்கையை முறியடித்த சீனா
சீனாவின் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் தம்பதிகள் பிரித்தானியா M16 உளவு அமைப்பிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சீனாவின் உளவு அமைப்பொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இருப்பினும் எங்களது உளவுப் பிரிவானது பிரித்தானியாவின் உளவு நடவடிக்கையை முறியடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பிரித்தானியாவின் M16 உளவு அமைப்பானது சீனாவில் உள்ள வெளிநாட்டவரைப் பயன்படுத்தி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சீனா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.