50 கிலோவுக்கு குறைவான எடையுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதித்த நாடு
50 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின், பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய் மாகாணங்களில் தற்போது சூறைக்காற்று அதிவேகமாக வீச தொடங்கியுள்ளது.
சீன அரசின் உத்தரவு
இதனால் பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுவதுடன், பெய்ஜிங்கில் விளையாட்டு போட்டிகளும் கூட ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் பல மாகாணங்களில் மணிக்கு 150 கிலோமீட்டர் (93 மைல்) வேகத்தில் குளிர் காற்று வீச தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கிய இந்த சூறைக்காற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) சீனாவின் பல மாகாணங்களை பாதிக்கலாம்.
50 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள மக்கள் இந்த காற்றில் அடித்து செல்லப்படலாம். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சூறைக்காற்றுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.