அமெரிக்க பொருட்களுக்கு புதிய வரி ; சீனா அதிரடி
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய வரி மார்ச் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று சீன நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதிதாக விதிக்கப்படும் வரிகள் தொடர்பான அறிக்கையில் சீன அரசு அமெரிக்க பொருட்கள் மீது 10 முதல் 15 சதவீதம் வரை வரியை விதிக்க உள்ளது.
கோழி, கோதுமை, சோளம் 15 சதவீத வரி
குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட முக்கிய விவசாயப் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும் என்று சீன நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அதிபராக பதவியேற்ற நாளில் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அடுத்த சில நாளில் சீனப் பொருட்கள் மீது 20 சதவீத வரியை விதிக்க உத்தரவிட்டார். தற்போது அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக கனடா, சீனா ஆகியவை பதிலடியாக வரி விதிப்பை அறிவித்துள்ளது.