இனி மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ளலாம்! சீன அரசு அனுமதி
சீனாவில் இனி ஒரு தம்பதி மூன்று குழந்தை வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டது சீனா நாடாகும். இந்நிலையில் உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் உள்ள வுஹான் நகரில் தான் கண்டறியப்பட்டது. இதையடுத்து அனைத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கியது.
இந்நாட்டில் சில ஆண்டுகளாகவே குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகின்றது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற கட்டுப்பாட்டை நீக்கியது.
இந்நிலையில் சீனாவில் ஒரு தம்பதி மூன்று குழந்தை குழந்தை வரை பெற்று கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவ்வாறு பெற்று கொண்டால் சீன அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
மேலும் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு மானியங்கள், வரி குறைப்பு போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பீஜிங், சிச்சுவான், ஜியாங்சி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாகாணங்களில் மகப்பேறு காலத்தின் போது பெண்கள் எடுக்கப்படும் விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்துள்ளனர். குறிப்பாக தந்தை வழி விடுப்பையும் அதிகரித்துள்