ஈரான் மீது அமெரிக்கா தடைக்கு சீனா கடும் கண்டனம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் "பொருளாதார டி-டே" பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian), இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தடைகளை விதிப்பதும் அழுத்தம் கொடுப்பதும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று தெரிவித்தார்.

மேலும், பொறுப்பான நடவடிக்கைகளை எடுத்து, தூதரக மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினரை சீனா வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் (Kpler) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனா வாங்குவதால், இந்த நடவடிக்கைகள் சீனாவைப் பிரதானமாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.