பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய சீனா
பாகிஸ்தான் செயற்கைக்கோளை சீனா விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ளதொரு விண்வெளி ஏவுதளத்திலிருந்து பாகிஸ்தானின் ரிமோட் சென்சிங் (பிஆர்எஸ்எஸ்-2) செயற்கைக்கோள் மற்றும் சீனாவின் ஏர்சாட் 03, 04 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள், இன்று(19) ‘லிஜியான்1 ஒய்8’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
இதன்மூலம், சீனா மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 3-ஆவது பாகிஸ்தானிய செயற்கைக்கோளாக பிஆர்எஸ்எஸ்-2 மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், கடந்த ஜனவரியில் பாகிஸ்தானின் பிஆர்எஸ்சி-இ01 செயற்கைக்கோளும் அதனைத்தொடர்ந்து கடந்த ஜூலையில் பிஆர்எஸ்எஸ்-1 செயற்கைக்கோளும் சீனாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடன் விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.