உக்ரைன் -ரஷ்யா போர்: சிக்கித்தவித்த சீனர்கள் மீட்பு
உக்ரைனில் சிக்கி தவித்த சீனநாட்டைச் சேர்ந்தவர்களை ஏற்றி வந்த விமானம் பத்திரமாக சீனா வந்தடைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி படையெடுத்த ரஷ்யா தொடர்ந்து 18-வது நாளாக தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவித்த சீனாவைச் சேர்ந்தவர்களை மீட்க சென்ற தற்காலிக விமானம் சீனாவின் சாங்தாங் மாகாணத்தில் இன்று (13-03-2022) ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக வந்து சேர்ந்தது. இதுவரை 11 தற்காலிக விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கித்தவித்த சீனர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.