ஹொலிவுட் படங்களுக்கு சீனா விதித்த கட்டுப்பாடு ; அடி மேல் அடி வாங்கும் அமெரிக்கா
அமெரிக்க - சீனா வரிப்போர் காரணமாக, ஹொலிவுட் படங்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சில நாட்களாக, வர்த்தக போர் நடந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனப் பொருட்களின் மீதான வரிகளை உயர்த்தினார், அதே நேரத்தில் சீனா 84 சதவீத பழிவாங்கும் வரியை விதித்துள்ளது.
வர்த்தகப் போரின் எதிரொலி
இந்த வர்த்தகப் போரின் எதிரொலியாக, ஹொலிவுட் படங்கள் மீது சீனா சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளது.
இது குறித்து சீன திரைப்பட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், சீனாவில் திரையிடப்படும் அமெரிக்காவின் ஹொலிவுட் திரைப்படங்களின் எண்ணிக்கையை மிதமாக குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் சந்தை சட்டத்தைப் பின்பற்றுவோம், பார்வையாளர்களின் விருப்பத்தை மதிப்போம், அமெரிக்க படங்களின் எண்ணிக்கையை மிதமாகக் குறைப்போம். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.