ஐரோப்பாவில் பல வீடுகளில் பாலியல் அடிமைகளாக சீன பெண்கள்; வெளியான அதிர்ச்சி தகவல்!

China Europe
By Sundaresan Feb 11, 2023 08:29 PM GMT
Report

ஐரோப்பிய நாடுகளில் பல வீடுகளில் சீனாவை சேர்ந்த இளம்பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்து வைக்கப்பட்ட தகவல் பற்றி யூரோபோல் பொலிசாருக்கு சென்றுள்ளது.

இதுபற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சட்ட அமலாக்க அமைப்பான யூரோபோல் நடத்திய அதிரடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இதற்காக, 3 ஆண்டுகளாக ஆன்லைன் வழியே மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை அவர்கள் கண்காணித்தனர். இதில், இதுவரை பாதிக்கப்பட்ட 200 இளம்பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என யூரோபோல் தெரிவித்து உள்ளது.

சீன இளம்பெண்களை ஆன்லைன் வழியே விளம்பரம் செய்து கவர்ந்து இழுத்து, ஐரோப்பிய ஓட்டல்களில் பணியமர்த்துகின்றனர். அதன்பின் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சுழற்சி முறையில் அவர்களை விபசாரத்தில் தள்ளுகின்றனர்.

நல்ல வேலை, சம்பளம் என நம்ப வைத்து ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி செல்லும் சீன இளம்பெண்கள் இறுதியில் விபசாரத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். இதற்காக சீனாவில் பிரபல தகவல் அனுப்பும் செயலிகளை குற்றவாளிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதன் வழியே இளம்பெண்களை அவர்கள் ஈர்த்து உள்ளனர்.

ஐரோப்பாவில் பல வீடுகளில் பாலியல் அடிமைகளாக சீன பெண்கள்; வெளியான அதிர்ச்சி தகவல்! | Chinese Women As Sex Slaves Households In Europe

இதன்பின் தங்களிடம் சிக்கும் சீன பெண்களை ஐரோப்பிய யூனியனுக்கான போலியான அடையாள அட்டை, ஆவணங்களை தயாரித்து மற்றும் குடியுரிமை அனுமதியையும் ஏற்பாடு செய்து பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் வீடுகளில் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்படும் அவர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாமல் அதற்கு பதிலாக, பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படும் அவலம் நடந்து உள்ளது.

3 ஆண்டு விசாரணை முடிவில் 200 பேர் மீட்கப்பட்டபோதும், இது மிக குறைவு என்றும் வெளியே வராமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்றும் யூரோபோல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக பெல்ஜிய நாட்டு போலீசார், அந்நாட்டு அரசு வழக்கறிஞர் தலைமையில் நடத்திய அதிரடி சோதனையில் ஸ்பெயின், ஜெர்மனி, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பலரை மீட்டு உள்ளனர்.

சுவிட்சர்லாந்தில், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில் இந்த கும்பலுக்கு எதிராக நடந்த சோதனையில் 7 பேர் மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 7-ந்தேதி பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ், ஆன்ட்வெர்ப் மற்றும் சார்லெராய் நகரங்களில் மற்றும் ஸ்பெயின் நாட்டின் அலிகேன்டெ மற்றும் பார்சிலோனா நகரங்களில் 34 வீடுகளில் நடந்த சோதனையில், 28 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்களில் 27 பேர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் ஸ்பெயினில் மீட்கப்பட்டார். இதுபோன்று ஐரோப்பாவில் யூரோபோல் அமைப்பினரால் அதிகம் தேடப்படும் பட்டியலில் உள்ள 5 சீன நாட்டினரை பெல்ஜியம் நாட்டில் வைத்து பொலிசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சொந்த நாட்டு இளம்பெண்களையே, பணத்திற்காக விலை பேசும் சீனர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US