கொலம்பியா ஜனாதிபதி நோய்வாய்ப்பட்ட மனிதர்; டிரம்ப் விமர்சனம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை நோய்வாய்ப்பட்ட மனிதர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அவர் மீது பாரிய குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை ஒரு "நோய்வாய்ப்பட்ட மனிதர்" (Sick man) என்று டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமெரிக்காவிற்கு கொகெய்ன் (Cocaine) கடத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு கொலம்பியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த யோசனைக்குத் தான் ஆதரவாக இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது கொலம்பியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை யோசனை தனக்கு சரியாகத் தெரிகின்றது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறிப்பிட்டுள்ளமை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.