பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் சதிமுயற்சிகள்!
பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் சதிமுயற்சிகள் இடம்பெற்றுள்ளன என குற்றம்சாட்டி பொலிஸ் தலைமையகத்தில் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை சிராந்த அமரசிங்க என்பவரே தாக்கல் செய்துள்ளார்.
இச் சம்பவத்தின் பின்னால் ஒரு பெரிய நாடகம் உள்ளது பெலன்வில தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் மறக்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொரளையில் கைக்குண்டு மீட்கப்பட்டமைக்கும் பெலன்விலவில் கைக்குண்டு மீட்கப்பட்டமைக்கும் தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சதி முயற்சி 2021 செப்டம்பர் 13ஆம் திகதி ஆரம்பமானது, நாட்டின் மீது எந்த நிமிடத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற செய்தியுடன் இது ஆரம்பமானது மறுநாள் நாரஹன்பிட்டி வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இச் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் பெலன்விலவில் கைக்குண்டு மீட்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.