வருகின்றது க்யூபாவின் அப்டலா தடுப்பூசி; மூன்று டோஸ் போடணும்; 92% திறன் வாய்ந்தது!
கொரொனாவுக்கு எதிரான க்யூபாவின் தடுப்பூசி 92% திறன் கொண்டதாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் Miguel Diaz Canel தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்புகளை தடுக்க கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு செலுத்தி வரும் நிலையில் க்யூபாவும் புதிய தடுப்பூசியை கண்டறிந்துள்ளது.
க்யூபாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டறியப்பட்டுள்ள அப்டலா தடுப்பூசி கொரொனாவுக்கு எதிராக 92% திறனுடன் செயல்படுவதாக அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ் செலுத்தி கொள்ளும் வகையில் உள்ள நிலையில், அப்டலா தடுப்பூசி மூன்று டோஸ் எடுத்துக் கொள்ளும் வகையில் உள்ளது.
இதேவேளை அப்டலா தடுப்பூசியை க்யூபா மருத்துவ நிபுணர்கள் 13 மாதங்களில் தயாரித்து சாதித்துள்ளதாக க்யூபா அதிபர் மிகுவெல் தியாஸ் கானெல் (Miguel Diaz Canel)தெரிவித்துள்ளார்.