டொரோண்டோவில் கென்யா அகதியின் மரணம் ; “மேம்பட்ட மனநல ஆதரவு தேவை”
கடந்த மாத இறுதியில் டொரோண்டோவின் நார்த் யார்க் பகுதியில் உள்ள அகதிகளுக்கான தங்குமிடத்தில் மரணமடைந்த கென்யா அகதிக்கு, போதுமான மனநல ஆதரவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை கென்யா சமூகத்தினர் மற்றும் ஆப்பிரிக்க அகதிகளின் உரிமை மற்றும் நலனுக்காக போராடும் அமைப்புகள் எழுப்பியுள்ளனர்.
32 வயதான எட்வின் கிப்லகாட் (Edwin Kiplagat), இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், ஒரு கணவனாகவும் இருந்தார்.
அவர் ஏப்ரல் 30 அன்று டொரோண்டோ நகராட்சியின் “Willowdale Welcome Centre” அகதி தங்குமிடத்தில் உயிரிழந்தார்.
கிப்லகாட், மேற்கு கென்யாவின் எல்கெயோ மராக்வேட் மாவட்டத்திலுள்ள இடென் (Iten) நகரத்தைச் சேர்ந்தவர்.
2023 செப்டம்பரில் தனது குடும்பத்துக்கு ஒரு நல்ல எதிர்காலம் தேடி கனடாவுக்கு வந்தார். ஆனால் கனடாவில் நிலைத்த வேலை மற்றும் வீடு கிடைக்காததால் கடுமையான சவால்கள் சந்திக்க நேர்ந்தது. அதிக அழுத்தங்களை சமாளிக்க முடியாமல் கிப்லகாட் மது பழக்கத்தில் சிக்கி விட்டதாக, ஆப்பிரிக்க கனடியர் கூட்டமைப்பின் (African Canadian Collective) ஒருங்கிணைப்பாளர் Rev. எடி ஜும்பா (Eddie Jjumba) தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை North York இல் உள்ள Dominion Church-இல் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த மூன்று வருடங்களில்ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மனநல பிரச்சனைகள் மற்றும் நஞ்சுண்ணல் காரணமாக உயிரிழந்த நான்கு அல்லது ஐந்து கென்யா அகதிகளைப் பற்றி அறிவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.