ஜோ பைடனின் வருகைக்கு முன் சோதனையை நடத்துங்கள் - வடகொரியாவுக்கு அனுமதி!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) ஆசிய பயணத்திற்கு முன்னதாக வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளtஹாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா விதித்த பல தடைகளை மீறி இந்த ஆண்டு தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந் நிலையில், ஜோ பைடனின் (Joe Biden) ஆசிய வருகையை முன்னிட்டு வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நாளை தனது முதல் ஆசிய பயணத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் நடத்திய உச்சி மாநாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இந்த நிலையில், பயணத்தின் போது வடகொரியா, அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனைகள் அல்லது அணு ஆயுத சோதனை மேற்கொள்ளலாம் என்றும் உளவுத்துறை தெரிவிப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.