உருகும் ஐஸால் இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட குழப்பம்!
ஆல்ப்ஸ் (Alps) மலைத்தொடரில் சுவிட்ஸர்லந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான எல்லைப் பகுதி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. Theodul எனும் பனிப்பாறை உருகுவதே அதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.
1973-ஆம் ஆண்டுக்கும் 2010-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பனிப்பாறையின் சுமார் கால்வாசிப் பகுதி உருகிவிட்டது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சுமார் 100 மீட்டர் எல்லைப் பகுதி அடிக்கடி மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் செயல்படும் நிறுவனங்கள் சில நேரங்களில் இத்தாலியில் இருக்கிறோமா சுவிட்ஸர்லந்தில் உள்ளோமா என்ற குழப்பத்தில் தவிக்கின்றன.
2018-ஆம் ஆண்டில் அது குறித்த அரசதந்திரப் பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கம் எட்டப்பட்டது. உடன்பாடு கையெழுத்தான பிறகே, அது குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.
ஆனால் இவ்வாண்டு இறுதிக்குள் அதற்குச் சாத்தியமில்லை என கருதப்படுகிறது.
அதேசமயம் சுற்றுப்பயணத்துறைக்குப் பெயர்பெற்ற அந்தப் பகுதியில் ஏற்கெனவே பல பனிச்சறுக்கு உல்லாசத் தலங்கள் உள்ளதுடன் கம்பிவட வண்டி நிலையம் ஒன்றை அமைப்பது உள்ளிட்ட புதுத் திட்டங்களும் உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.