சுவிஸில் கொரோனா மரணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் Covid-19 தொற்றால் 923 பேர் பாதிக்கப்பட்டதோடு மரணம் எதுவும் நிகழவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8 இலட்சத்து 51ஆயிரத்து 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11ஆயிரத்து 150 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுவிஸில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 43ஆயிரத்து 524 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 139 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. சுவிஸில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 96ஆயிரத்து 935 ஆக உள்ளது.