பிரித்தானிய உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி!
பிரித்தானியாவில் அண்மையில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சி மூன்றாவது முறையாக வெற்றியை பெற்றுள்ளது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேலும், தேர்தலில் சுயேட்ச்சையாக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தருண் குலாட்டியும் தோல்வியை சந்தித்தார்.
அதேபோல் பிரித்தானியா உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
கன்சர்வேடிவ் கட்சி பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மேலும் பிரித்தானியாவின் வடமேற்கில் உள்ள பிளாக்பூல் சவுத் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.