கன்சவர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அதிர்ச்சித் தோல்வி
கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலியேவ், பொதுத் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வவியைத் தழுவியுள்ளார்.
ஓட்டாவாவின் கார்லட்டன் தொகுதியில் சுமார் இரண்டு தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்புரிமையை வகித்து வந்த பொலியேவ் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்த கார்லட்டன் தொகுதியில், லிபரல் கட்சியின் ப்ரூஸ் ஃபான்ஜாய் 42,374 வாக்குகள் (50.6%) பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொலியேவ் 38,581 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.
இம்முறை கன்சர்வேட்டிவ் கட்சி நாடளாவிய அளவில் வாக்கு சதவிகிதமும், இடங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தாலும் கன்சர்வேட்டிவ் தலைவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இதேவேளை, தனது தொகுதி முடிவுகள் வரும் முன்பே கட்சி ஆதரவாளர்களிடம் உரையாற்றிய பொலியேவ் தலைமை பதவியை தொடருவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.