டொரொன்டோவில் எதனால் போக்குவரத்து நெரிசல்!
டொரொன்டோ நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது,
அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகனப் பதிவு எண்ணிக்கையின் உயர்வு மற்றும் பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாத சாலைகள் போன்ற காரணிகள் போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த நகரத்தில் போக்குவரத்து நெரிசலை மிக அதிகமாக தூண்டும் காரணியாக ‘கட்டுமான பணிகள்’ இருப்பதாக, அண்மைய நகர ஊழியர்கள் சபை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு கோடையில், டொரொன்டோவில் சாலைகளின் 24% தற்காலிகமாக மூடப்பட்டதால், பயண நேரம் இருமடங்கு உயர்ந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 முதல் 2023 வரை, டொரொன்டோவின் மக்கள் தொகை 1.25 லட்சம் பேரினால் அதிகரித்துள்ளது.
2014-ஆம் ஆண்டிலிருந்து வாகன பதிவுகள் 26% னால் உயர்ந்துள்ளன. இருப்பினும், நகரின் 5,600 கி.மீ. சாலைகளில் பல ஆண்டுகளாக எந்தவிதமான விரிவாக்கமும் செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சவால்களுக்கிடையில், கட்டுமான பணிகள் தான் “முக்கியமான நெரிசல் தூண்டுதல் காரணியாக” இருந்துவருவதாக அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.