சர்வதேச ஏதிலிச் சட்டங்களை கனடா மீறுவதாக குற்றச்சாட்டு
கனேடிய அரசாங்கம் ஏதிலிகள் விவகாரத்தில் பிழையான அணுகுமுறைகளை பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏதிலிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.
சர்வதேச எதிரிகள் சட்டங்களுக்கு புறம்பான வகையில் கனேடிய அரசாங்கம் எதிலிகளை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பி வைப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடா விற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இவ்வாறு ஏதிலிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கைகள் அதிக அளவில் இடம் பெற்று வருவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் தஞ்சம் கோரும் மக்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பான நாடு கிடையாது என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தகுதியற்ற ஏதிலி கோரிக்கையாளர்கள் என கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுபவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.