கென்யாவில் வாக்குக்காக கழிவறைகளை சுத்தம் செய்யும் அரசியல்வாதிகள்
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரும் 9ஆம் திகதி அதிபர் தேர்தல், நாடாளுமன்ற பொதுத்தேர்தல், கவர்னர் தேர்தல் என ஒரே நேரத்தில் அணைத்து தேர்தலும் நடக்க உள்ளதால் கென்யாவே பரபரப்பாகி உள்ளது.
இந்த தேர்தலில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் போட்டியிம் நிலையிலும் இதில் பல பிரமுகர்கள் தற்போதும் பதவிகளில் இருந்து மீண்டும் ஓட்டு கேட்டு களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான வேட்பாளர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆயினும் பொதுமக்களிடம் ஓட்டுக்களை வாங்குவதற்காக எந்த தரத்துக்கும் கீழே இறங்கி அவர்களை கவரும் வேலைகளை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்துக்கு சென்றுள்ள நிலையில் அந்த நாட்டின் ஆடம்பரமான அரசியல்வாதிகள் வாக்காளர்களை கவருவதற்காக பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்றுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.
மேலும் கென்யா நாட்டு அரசியல்வாதிகள் நைரோபி கழிவறைகளை சுத்தம் செய்து தந்தும், உணவு செய்து தந்தும், காலணிகளை மெருகூட்டியும் பொதுமக்களின் வாக்குகளை கேட்டு வருவதாக அந்த நாட்டு மக்கள் கூறுகின்றனர்.